பக்கங்கள்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஓவியர் ராஜனின் சிறுகதை



 சிறுகதை               சிறுகதை

       உண்மைஎன்றொருகதை

                    அது ஒரு அரசவிழா.ஒரு கொலைக்களமும் கூட ..

அங்கே அரசனே மக்கள் முனனிலையில்  பகிரங்கமாக நடததும் அரச நரபலி விழா.

          விழா ஏற்பாடுகள் களை கட்டிக்கொண்டிருக்கிறது.கொல்லுப் பட்டரையில் வார்ப்புகளில் இரும்பு உருக்கி ஊற்றப்பட்டு ஆற வைத்து மீண்டும் உலைக்களத்தில் பழுக்கவைத்து சம்மட்டியால் அடித்து கூர்தீட்டி வரிசையாய் சரியான இடைவௌி   இட்டு நடப்பட்டிருக்கிறது கழுமரங்கள்.

        அந்த மனித பலிபீடத்தின் ஒன்றின்் அடிபாகத்தில்  வேலைபாட்டுடன் கூடிய ஒரு காட்சியை ஒருசிற்பி தானாக செதுக்கியிருக்கிறான்.அந்த காட்சி அரசுக்கும் அரசனுக்கும் எதிராய் இருந்தது.

          நிச்சயம் அந்த சிற்பி நிர்வாணியாய் இருக்கவேண்டும் அல்லது சமண ஏற்புடையனாக இருக்க வேண்டும்.தனக்கான கழுவும் அதில் ஒன்றாக கலந்து இருப்பதாய் விரும்பி  மரணத்தையும் முத்தமிட எதிர் கொண்டு காத்திருப்பதாய் மன்னனுக்கு புரிய வைத்திருக்கிறான்.

              

                  மூன்று மாதங்களாக நடப்பட்டிருக்கும் கழுவினை மக்கள் எல்லோரும் காட்சி ப்பொருளாக வந்து பார்த்தாயிற்று .குறிப்பாக சிற்பியின் எதிர்வினையையும் மக்கள் தங்களுக்குள் பேசியும் ஆயிற்று.

            

              கழுவில் ஏற்றப்பட இருப்பது மக்களின் எண்ணங்களை.. நம்பிக்கைகளை மட்டுமே.. என்பது பாண்டியனின் அல்லது அவனின் மூளையை சுரண்டிக்கொண்டிருக்கும் ஆரிய புரோகிதகுழுவின் முடிவு.

       இதை மக்களுக்கு அறிவித்தும் ஆகிவிட்டது.மக்கள் உணர்ந்தும் ஆகிவிட்டது.

     

                இதை நிகழ்கால சரித்திரம் அப்படியே பதியவைத்து எதிர்காலத்துக்குக் கடத்திச் சொல்லுமா..?அல்லது மறக்கடிக்கபடுமா.?.?இதற்குசாட்சியாய் இருந்து பதில் சொல்லும் பொருப்பானவர்களை அந்த மக்கள் திரளில் தேடமுடியுமா?

               இந்தமாதிரி கொலைக்கள விழாக்களை மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்கிற ஆட்சியாளர்கள் காலம் காலமாக நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

          பலி பீடங்களின் வடிவங்கள்தான் மாறிக்கொண்டிருக்கும்.

        மக்களைப்பொருத்தவரை ....நல்லலவர்களோ..!! நல்லவைகளோ.! தோற்கடிக்கப்பட்டால் அல்லது தாஙகள் இழக்க நேரிட்டால் ...அதை வழிபடுவது என்ற நிலையை மேற்கொள்ளுகிறார்கள் .

         வழிபடுவது ஒன்றே தீயவவற்றின் மீதான தங்களது எதிர்ப்பைக்காட்டும் சாதனமாக இந்த உலகம் பின்பற்றி வருகிறது.

                 

              இரண்டு கைகளாலும் முத்துக்கள் பதித்த கணமான கூறிய வாளை உறையிலிருந்து உருவி கனப்பொழுதில் தனது மார்பை நோக்கிப் பாய்த்தது..........................

              "வீ....ல்......"  என்று ஒரு பெண்குரல் மெல்ல..மெல்ல..அமுங்கி நீர்குமிழ்கள் கொதித்து உடையும் ஒலி மட்டும் கேட்கிறது சுற்றிலும் இருள்கவ்வுகிறது

        புதைகுழிக்குள் இரண்டு விழிகள் மட்டும் மரணபயத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.

        திடுக்கிட்டு விழித்த சாத்தன் தான் படுத்திருந்த கல் படுக்கை வியர்வையால் பிசுபிசுப்பதை உணர்கிறான் .படுத்தபடியே சுற்றும்முற்றும் குழப்பத்துடன் மெல்ல மெல்ல சூழலைஉணர ஆரம்பித்து கணவு பிரேமைக்குள்ளிருந்து வௌிவந்துகெரண்டிருக்கும் போதே எதிரில் ....அகோரமான ஒரு முகம் கூரிய நகங்களோடு அவனைத் தாக்குவதற்கு நெருங்குகிறது...

      இருந்தாலும் இந்த நிர்வாணி இளைஞனை நனவுலகில் யாராலும் பயப்பட வைக்கமுடியாது.

       துணிவோடு படுத்தபடியே நண்பனின் முகமூடியை கைகளை நீட்டி உறித்து விலக்கியபடி எழுந்து அமர்கிறான்.

     என்ன சாத்துவா ..பயஙகர கணவில் விழித்திருக்கிறாய் போலிருக்கு ...உன்னைக்கண்டு மருத்துவம் பெற ஒரு பெண் வந்திருக்கிறாள் .

            வௌியே  தோட்டத்திற்குள் வருகிறரார்கள்

  யாருமில்லை....

         சாத்துவன் குழப்பத்தில் நண்பனைப் பார்க்கிறான்.

     திடீரென்று நீரின் சலம்பல் ஒலியைத்தொடர்ந்து பெண்ணின் அவலக்குரல் ஒரு நொடியில் கேட்டு மறைகிறது .குரல் வந்த திசை நோக்கி ஓடுகிறரர்கள்.

         தோட்டத்தில் இரவில் அடித்த ஆடிக்காற்றில் சறுகுகளால் மூடப்பட்ட தரையோடு தரையாக கிடந்த கிணற்றுப் பகுதியிலிருந்துதான் பெண்ணின் குரல் வருகிறது.

         பாசிகள் அல்லி மொட்டுக்கள்,கூடவே இரண்டு கண்கள் வௌியே மிண்ணி மறைகிறது. இவர்கள் இருவரும் அவளை கிணற்றுக்குள்ளிருந்து காப்பாற்ற எத்தனிக்கையில் அவள் அனாயசமாக  நீச்சலடித்து கரையேறி ஈர ஆடையோடு திரும்பிப்பார்த்து சிரித்தபடி ஓடி மறைகிறாள்.

            

           அரச காவலர்கள் தோட்டப்படலையை திறந்தபடி உள்ளே நுழைகிறார்கள் .

            " இங்கே மாசாத்துவன் மகன் இளஞ்சாத்துவன் என்பது....."

        "நான்தான் என்ன வேண்டும்.."

     வீரர்கள் ஒருகனம் தயங்கியபடி

     "உங்களது பெயரும் சங்கப்பலகை வாத களத்தில் இருக்கிறது ...ஆனால் எந்த நாளில் என்று குறிப்பிடப்படவில்லை ...என்பதை சொல்லிவிட்டுப்போக வந்தோம்.."

         "சமண சங்கமா...? வைணவ சங்கமா..?  புத்த சங்கமா..?  ஏது சங்கமா..?  சைவ சங்கமா..?  "

      கோபத்தோடு கர்ஜித்தான் நண்பன்.வந்தவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.ஏனென்றால் சைவ பாண்டிய மன்னனி்ன் அராஜக கொலைக்களத்திற்கு இந்த காலகட்டத்தில் பரிநிர்வாணிகளைத்தானே காவுகேட்கிறான்.இது நாடே அறிந்த அரசியல்.இதில் வாத வித்தை என்ற கபட தலைப்புச்சொல் வேறு....

       அனல் வாதம், புனல் வாதம், என்ற கபடம் வேறு போட்டி என்ற பெயரில் எப்போதும் சமணர்களே தோற்கடிக்கப்பட்டு கூர்மையான கழு கம்பியில் உட்கார்ந்த நிலையில் ஆசனவாய் வழியாகச்சொருகி கொன்றுவிடுவார்கள்.ஆக மொத்தத்தில இயலபாக சிந்திப்பவன் சாகவேண்டும்.இல்லாத கடவுளை விதைப்பவன் மட்டுமே இவ்உலகில் வாழவேண்டும்.

                   

                 நடுச்சாமத்தில் இரவில் பாண்டியன் யானையின் மீதுள்ள பல்லக்கில்  ஞானசம்பந்தன் மற்றும் பரிவாரங்கள் புடை சூழ வந்துகொண்டிருக்கிறான்.இருட்டில் தீப்பநத வௌிச்சத்தில் தெருவின் குறுக்காக கழிவு நீர் வடிகாலில் அடைப்பை ஒரு முதியவரும் ஒரு இளம் பெண்ணும் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள் .

         குதிரையில் நண்பனோடு வந்துகொண்டருந்த இளஞ்சாத்துவன் கீழே இறங்கி உதவ முன்வருகிறான்.தெரு முனையில் வைக்கப்பட்டிருந்த தீப்பந்தத்தின் ஒளியிலும்,மூன்றாம்பிறை நிலவொளியிலும் அந்தப்பெண்ணை அடையாளம் கண்டுகொண்டான.் தோட்டத்திற்கு மருத்துவம் பெற வந்து கிணற்றில் விழுந்து மூழ்கி நீந்தி தப்பிச்சென்ற அதேகண்களுக்குச் சொந்தக்காரி.

      நிலவொளியில் வௌளிவீதியாய் இருந்தாள்.நிர்வாண கொள்கைக்கு காதலைப் பற்றியோ ,காதலிப்பதுவோ தடையாக கருதமுடியாது என்பது நவீன இளஞ்சாத்துவன் போன்றோரது வாதம்.புத்த சங்கத்திலோ சமண சங்கத்திலோ வாத பிரதிவாதங்களிருக்கலாம் .ஆனால் அதிலும் அரசியல் கலந்திருக்கிறது என்பது இளஞ்சாத்துவன் போன்றோரது நவீன வாதம்.

        அதனால்தான் நவீனம் ஒழிக்கப்பட வேண்டும் ..ஏகத்துவ கடவுள் கொள்கை ஏற்கப்படவேண்டும்..என்பது ஞாணசம்பந்தன் போன்றோரது முடக்குவாதம்.அதையே அரசியலாக்கி உண்மைகளைத் தந்திரமாக அரசனின் ஒத்துழைப்பில் கழுவில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்...இளஞ்சாத்துவன்போன்றோர் பலிகடாக்கள்.

        இந்த நிலவொளியில் அந்தப்பெண்னோடு சில நாழிகைகள் பழகி கழுவேறி மடிந்தாலும் போதும் என்று என்று என்னுமளவுக்கு காதல் இயல்பாக அவனுள் பூத்து விட்டது.

         அம்பாள் கச்சை அவிழ்த்து முளைப்பால் கொடுத்து தமிழ்ப்பா இயற்ற அருள் தந்தாக கற்பிக்கப்பட்ட ஞாணசம்பந்தன்தான் பாண்டியனுக்கு அம்பாளுக்கு நேரடி தூதுவன் இப்போது.

        பாண்டியன் கருத்துக் கொலை அரசியலுக்கு நரபலி கேட்கும் ரத்த வெறியிலிருக்கிறான் என்பதைவிட  பாண்டிய பாரம்பரியத்தையும் தமிழ் வளமையையும் காவு கேட்கும் கும்பவில் சேர்ந்து தமிழையே நரபலியிட்டுக்கொண்டிருக்கிறான்என்பது இளஞ்சாத்துவனின் பிரச்சாரம்.

          மூன்றாம்பிறையின் இந்த யுகத்தின் இந்த நள்ளிரவில் கொள்கை முரண்களோடு சேர்ந்து காதலும் குறுக்கிட்ட நொடியில்் நிர்வாணனும் சாக்கடைத் துப்புரவில் இறங்கிவிட்டான் தோழனுடன்.

        தொலைவிலிருந்து வந்த அரச காவலர்கள் யானையின்மீதுவிரிக்கப்பட்டுள்ள போர்வையை உருவி ஈட்டியில் சுற்றி இவர்கள் மன்னன் பார்வையில் படாமலிருக்க இடைவௌியில் திறை போடுகிறரார்கள்.

        ம்ன்னனின் யானை அருகில் கடக்கிறது ,திடீரென்று இளஞசாத்துவன் திரையைக் குறுங்கத்தியால் கிழித்தபடி வௌிவந்து ...

        "இதிலென்னஇருக்கு..மறைப்பதற்கு. மன்னர் தீண்டாமை,தீட்டு,புனிதங்களை ஆதரிக்கிராரோ?"

       ஞாணசம்பந்தர் குறுக்கிட்டு "மக்களின் கழிவு மன்னருக்கும் மன்னர் சார்ந்நோருக்கும் ஒவ்வாது..இளஞ்சாத்துவரே.."

            "அப்படியென்றால் மன்னனின் கழிவும் சார்ந்தோரின் கழிவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமோ ஞாணப்பால் குடித்ததாகக் அறியப்படும் சம்பந்தனாரே.."

        "வாதகளத்துக்கான நாளில் நாம் விவாதிப்போம்..களத்தில்."என்று சம்பந்தன் கூறியபடி வீரர்களுக்கு சைகைகாட்ட அவர்களது ஊர்வலம் புறப்படுகிறது.

         மன்னனுக்கு குழப்பம் அதிகமாகிறது."அதென்ன அந்த சமணர் எதையோ பூடகமாக மன்னனின் கழிவு எனகிறாரே...?"

      "மன்னா..நமது கழு ஏற்றும் படலத்தைத்தான் கூறுகிறார்.."

     என்றதும் மன்னனின் முகத்திலும் கலக்கரேகை படர ஆரம்பித்துவிட்டது..

     "சிற்பி ஒருவன் கழுபீடத்தின் அடியில் இதே தொனியில் செதுக்கியிருக்கிறானாமே..யாரவர் எனறு கண்டாயிற்றா..?"

      அவருக்கும் வாத களத்திற்கு ஓலை அனுப்பியிருக்கிறது மன்னா.."

        அவர்களின் குரல் சாக்கடை கழிவிற்குள் புகுமுன் இளஞ்சாத்துவனின் இரத்த நாளங்களில் புகுந்து கொதிக்கவைத்துக்கொண்டிருந்தது.

       "அந்த சிற்பி எனக்கு நன்கு தெறிந்தவர்தான் .."என்ற அந்தப்பெண்ணின் அழகு நிர்வாணியை நிதானிக்கவைத்தது.

     "இப்பணியை  முடித்ததும் அந்த சிற்பியை சந்தித்து அரசியல் பணியை தொடர்வோம் .."என்றான் நண்பன்.

          (தொடரும்)

Location : S Veli St, Madurai, Tamil Nadu,
Posted via Blogaway

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக